#100 செயலி 100 நாள்
இந்த மென்பொருள் முழுக்க முழுக்க நிரலாக்கத்திலிருந்து 2019 நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் நம்ம தமிழ் மக்கள் யாரும் இந்த மென்பொருளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.
இந்த செயலியில் பயன்படுத்தவேண்டிய மென்பொருளை மட்டும் நான் தெரியப்படுத்தவில்லை. மாறாக நிரலாக்கத்திலிருந்து நிறுத்தப்பட்ட செயலிகளை எப்படியாவது உயிர் கொடுக்க முடியுமா என்று நோக்கமும் இருக்கு
கிளிப்பக்கெட் என்பது யூடியுப் போன்று செயல்படும் ஒரு மென்பொருள். யூடியுப் எப்படியெல்லாம் செயல்படுகிறதோ அப்படியெல்லாம் இதுவும் செயல்படும். காணொலிகளை அப்லோடு செய்வது, தனி சானல்களை உருவாக்க, குழுவாக காணொலிகளை உருவாக்க என அத்தனை வழிகளிலும் இது செயல்படும்.
2019ம் ஆண்டு நிரலாக்க மேம்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டாலும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கிறது.
யூடியுப் போன்று ஒரு தனிப்பட்ட நபரும் காணொலிகளை உருவாக்க இந்த மென்பொருள் பயன்படும்.
இது PHPயில் உருவாக்கப்பட்டிருப்பதால் பிஎச்பி நிரலாளர்கள் இதை மேம்படுத்தலாம்