#100செயலி100 நாள்
சில வருடங்களுக்கு முன்பு ஒரு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி என்றால் அவர்களுக்கு என்ன என்ன பணி என்று யோசித்து ஒரு செயல்திட்டம் ஒன்றை இணையத்தில் இருந்து திரட்டி செயல்படுத்தினேன். இதற்கு ஒரு மென்பொருள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். ஏனெனில் இந்தியாவில் உள்ள பல சிறு குறு நிறுவனங்களின் துவக்குநர்களுக்கும், முதன்மை செயல் அதிகாரிகளுக்கும் அவர்களுக்கான பணி என்ன என்று தெரியாமல் எல்லா பணியையும் அவர்களே செய்து கொண்டிருப்பார்கள்.
இங்கேதான் தொழில் செய்பவர்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
எல்லா வேலையும் தானே செய்யவேண்டும் எதற்கு ஊழியர்கள் என்று நினைப்பவர்கள் அதே இடத்தில்தான் நிற்பார்கள் .அவர்கள் அவர்கள் தொழிலை விரிவாகக்க இயலாது. ஆனால் தொழில்முனைவோர் தன்னிடம் இல்லாத ஒரு அறிவை அதற்கான ஆட்களை நியமித்து அந்தப்பணியை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள்.
அந்த நேரத்தில் நான் கண்டறிந்த மென்பொருள்தான் இந்த ஆப் ப்ளோவி.
ஒரு முன்மை செயல்அதிகாரிக்கு அலுவலக மேலாண்மையில் நாம் ஒதுக்குகின்ற ஒவ்வொரு நேரமும் முக்கியம். அதில் நிறுவனத்தின் வளர்ச்சி, பங்கு, இலக்கு, செய்யவேண்டிய திட்டங்கள், திட்டப்பணியின் தற்போதைய நிலை, பணம் திரட்டுதல், சந்தையில் நம் இடம் அதில் அடுத்த நமது இலக்கு என பலவகையானத் திட்டங்கள் இருக்கும் .அவற்றையெல்லாம் இந்த மென்பொருள் வழியே எளிதாக செய்யலாம்.
குறிப்பாக இதில் சாட்ஜிபிடி உள்ள்ளிணைக்கப்பட்டுள்ளதால் நமது பணிகளை இலகுவாக்கும். இது கற்றுக்கொள்வது சற்று கடினம் என்றாலும் முயற்சி செய்து இதில் புலமைப்பெற்றால் உங்களாலும் உங்களது தொழிலில் மேம்படலாம்
https://github.com/AppFlowy-IO/AppFlowy