உலகில் 800 கோடி மக்கள் இருக்கிறார்கள். 8 டிரில்லியன் டாலரைக்கொண்டு எல்லாருக்கும் ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் உணவளிக்க முடிகிறது. ஆனால் அதே 8டிரில்லியன் டாலரைக்கொண்டு 30% மக்களுக்கு மட்டுமே தரமான மருத்துவ சேவையை தரமுடன் கொடுக்க முடிகிறது. நமக்கான தேவை அதிகரிக்கும்
சீனாவில் குழந்தை கட்டுப்பட்டால் 30 வருடம் கழித்து மக்கள் தொகை கணக்கில் முதல் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு வந்திருக்கிறது. சீனாவில் ஒரு குழந்தை திட்டம் அறிமுகப்படுத்த அதே ஆண்டு இந்தியாவிலும் மக்கள் தொகை கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஜனநாயக நாடில்லையா , அடுத்த தேர்தலில் ஆட்சி மாறியஉடன் காட்சி மாறியது. இன்று உலகில் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா விளங்கிவருகிறது. சீனாவில் முதுமையானோர் அதிகமானோர் கொண்ட நாடாக விளங்கிவருகிறது.
அதிகமான முதுமையுள்ள நாட்டில் அவர்களை பராமரிக்க பலவிதமான கண்டுபிடிப்புகள் தேவை, ஏனெனில் அவர்களால் வேலை செய்ய முடியாது, அதனால் அவர்களிடமிருந்து வரும் வருமானம் குறையும், ஆனால் தன்நாட்டு குடிமக்களை அப்படி விட்டுவிட முடியுமா?
அதற்கேற்றார்போல் சீனா தன்னை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது.
இந்தியாவும் அதற்கு ஏ்ற்றார்ப்போல் மேம்படுத்தினாலும் இன்னமும் மேம்படுத்தப்படவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
இந்தியாவில் மருத்துவம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் மிக அதிக தேவையாக இருக்கின்றன. பணக்கார நோய் எனும் அதிக செலவு மிகுந்த நோய்கள் இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரந்து திரிகின்றது. எனில் இங்கே என்ன மாதிரியான கண்டுபிடிப்புகளுக்கு தேவை இருக்கிறது?
முழுதும் வாசிக்க லாகின் செய்து படிக்கவும் | பணம் செலுத்த உதவும் தொடுப்பு
செய்து படியுங்கள்
<br/><br>