#100செயலி100நாள்
கூகிள் மேப் எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்று தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்குக் கூட ஆச்சர்யமாக இருக்கும்
ஆனால் அதன் பிண்ணனியில் கூட ஏதோ ஒரு புவியியல் தகவல் தொகுப்பு மென்பொருள் இருக்கும்
இன்று நாம் பார்க்கவிருப்பதும் QGIS எனும் புவியியல் தகவல் அமைப்பு மென்பொருள்தான், இது ஒரு கட்டற்ற மென்பொருள்
இந்த மென்பொருளைக் கொண்டு புவியியல் சார் தரவை உருவாக்க, திருத்த, காட்சிப்படுத்த மற்றும் பகுப்பாய்வு செய்ய உங்களை அனுமதிக்கிறது. இது மேப்பிங், சுற்றுச்சூழல் பகுப்பாய்வு மற்றும் நகர்ப்புற திட்டமிடல், ஏரி, நீர்நிலைகளை கண்காணித்தல், போக்குவரத்துக்கு சிறந்த வழிகளை கண்டறிதல் , உங்கள் நிலத்தை மட்டும் வைத்து அதற்கேற்றவாறு மென்பொருளைக்கூட நீங்கள் செயல்படுத்தலாம், அதுமட்டுமல்லாது பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய திறன் வாய்ந்த மென்பொருள்
QGIS மூலம் நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் இங்கே:
* வரைபடங்களை உருவாக்கவும்
* ஏற்கனவே உள்ள வரைபடங்களைத் திருத்தவும்
* புவிசார் தரவுகளை பகுப்பாய்வு செய்யுங்கள்
* புவிசார் தரவுகளை காட்சிப்படுத்தவும்
உதவுகிறது
QGIS விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. மேகக் கணிமை மற்றும் மொபைல் சாதனங்களில் QGIS ஐ செயல்படுத்தவும் முடியும்
எதையாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டுமென்று யாரும் விரும்பினால் அவர்களுக்கு இந்த மென்பொருளை பரிந்துரைப்பேன்