100 செயலி 100 நாள்
100வது மென்பொருளாக உலகெமெங்கும் உள்ள தமிழர்களுக்கு பெரும் தரவுக்களஞ்சியமாக விளங்கும் தமிழ் இணைய கல்விக்கழகம் இணையத்தளத்தை அறிமுகப்படுத்துகிறேன்
இணையக்கல்வி
உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு இணையம் வழியாக தமிழை கற்பித்து சான்றிழ்களை வழங்கிவருகிறது
தமிழ் சார்ந்த மரபுகளை தேடி சேமித்து இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொடுக்கும் அரிய பணியையும் தமிழ் இணையகல்விக்கழகம் செய்து வருகிறது
தமிழ் கணிமை
தமிழ் சார்ந்த மென்பொருள்கள், எழுத்துருக்கள் போன்றவற்றை வெளியிட்டு சான்றிதழ் அளித்து அவற்றை தரப்படுத்துவதோடு தமிழ் கணிமை சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு வருடந்தோறும் நிதியும் அளித்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் தமிழ் இணைய மாநாடுகளையும் நடத்தி பரப்புரையும் செய்து வருகிறது
தமிழ் டிஜிட்டல் லைப்ரரி
தமிழ் டிஜிட்டல் லைப்ரரி வழியே பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை எண்ணிம வடிவத்தில் உருவாக்கி இலவசமாக வழங்கிவருகிறது.
வரலாற்றுச் சின்னங்கள்
தமிழகத்தின் வரலாற்றுச்சின்னங்களை அறிந்துகொள்ள ஏதுவதாக ஒரு தனிப்பக்கத்தினை உருவாக்கி வைத்துள்ளது.
தமிழின் இலக்கியங்கள், நிகண்டுகளை உருவாக்கி அவற்றை காலத்திற்கு ஏற்றவாறு மேலாண்மையும் செய்து
வருகிறது.
என்னதான் சொன்னாலும் இணையத்தில் தமிழ் என்று வரும்போது தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் இணையத்தளம் ஒரு பெருந்தரவகம், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு தமிழ் சார்ந்த, தமிழ் கணிமை சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவித்து வருகிறது. தமிழில் 10 கோடி பார்வைகளை பெற்ற தளமாக தமிழ் இணைய கல்விக்கழகம் விளங்கிவருகிறது.
இணையத்தின் தமிழ் வாசல் என்றால் அது தமிழ் இணையக்கல்விக்கழகம்தான்.
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழின் பெருந்தரவகம் தொடர்ந்து செயல்படவேண்டும். அதற்கு அரசு கொடுக்கும் நிதி போதாது அதை அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறேன்
நிறைய நிறைகள் என்றால் குறைகள் இருக்கின்றன. ஆனால் நிறையை உங்களிடம் சொல்லி குறையை அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
இத்தளம் ஏற்கனவே பலருக்கு அறிமுகம் என்றாலும் இன்னமும் பலருக்கு சென்று சேரவில்லை. எனவே முடிந்தவரை இந்தப் பதிவை அனைவரும் பகிரலாம்
இந்த 100 நாளாக என்னோடு பயணித்த
Arul Kumaran Uma Ganesh Mohideen Sathakathullah@vijay anand, Kodeeswaran உட்பட பலருக்கும் என் மனமுவந்த நன்றி!
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.