@#100apps100days
தமிழ்க்கணிமைக்காக பலரும் பணியாற்றினாலும் இன்று நாம் பார்க்கவிருப்பது 3 நிறுவனங்கள்.
1.சர்மா சொல்யூசன்ஸ், புதுக்கோட்டை.
2008-09ம் வருடம் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய பாஷா இந்தியா என்ற இணையத்தளம் வழியே புதுக்கோட்டை சர்மா சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் மென்பொருள் பற்றி தெரிந்துகொண்டேன். அதன்பின் அவர்கள் மென்பொருள்கள் பற்றி அறிந்தபோது அப்போதே 117 வகையான தமிழ் எழுத்துரு என்கோடிங்களுக்கு இலவச மென்பொருளை வெளியிட்டிருந்தனர். அது அனைத்து தரப்பு மக்களுக்கும் அப்போது பயனுள்ளதாக இருந்தது—
.
அதன் பின் விருப்பப்படி என்ற மென்பொருள். 117 வகையான தட்டச்சு முறைகளுடன் இயங்கும் வகையில் சிறு தொகையில் கொடுத்தனர். ஆனால் வணிக வாய்ப்பில் வெற்றிபெற வில்லை. 288-2010 காலக்கட்டத்திலயே இன்டிசைனில் ஸ்பெல் செக் கொடுத்திருந்தனர், விற்பனை வெகு சொற்பம்
2.பொன்விழி ஓசிஆர்
தமிழில் வந்த முதல் ஓசிஆர்,தயாநிதி மாறன் அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழுக்காக எழுத்துரு, மென்பொருள் அடங்கிய குறுந்தகடு இலவசமாக வழங்கப்பட்டபோது பலவகையான மென்பொருள்களுடன் பொன்விழி ஓசிஆர் வழங்கப்பட்டது.
அதை உருவாக்கியவர் முனைவர்.கிருஷ்ணமுர்த்தி ஐயா அவர்கள்.அதன் செல்பேசி திரையில் எழுதினால் தமிழ் தட்டச்சு செய்யும் மென்பொருள் முதன் முதலில் உருவாக்கினார். இது எதுவும் சாதாரண விசயமில்லை.ஆனால் அது கூகிள் நிறுவனத்தின் தட்டச்சு செயலியில் இந்த திரை எழுத்து வந்தபோது ஐயாவின் மென்பொருளை வாங்க ஆள் இல்லாமல் போய்விட்டது. இன்றுவரை ஐயா அவர்களின் பங்களிப்பிற்கு அரசு அவரை கவுரவிக்கவில்லை என்பது எனது தனிப்பட்ட ஆதங்கம்
3. மென்தமிழ் சொல்லாளர்
சமீபகாலத்தில் வந்த மென்தமிழ் சொல்லாளர் ஒரு சிறந்த மென்பொருளாக வெளிவந்துள்ளது. முனைவர் தெய்வ சுந்தரம் நயினார்தெய்வசுந்தரம் ஐயா அவர்களின் மொழியியில் புலமையோடு மொழியியல் கட்டமைப்புடன் வெளிவந்த இந்த மென்பொருள் பல வகையான வசதிகளுடன் வெளிவந்துள்ளது. தனிப்பட்ட முறையில் நான் வாங்கி பயன்படுத்தியபோது எனக்கு பெரிதும் உதவியது.இன்று வரை பல அதை மேம்படுத்தி வருகின்றார்.
இந்த 3 மென்பொருள்களும் 2008 முதல் இன்று வரை பயன்படுத்த ஏதுவாக இருந்தும் இலவசம் என்ற உடன் இவர்களை மறந்துவிட்டனர் தமிழக மக்கள்
பெரும் பொருள் செலவுடன் தங்களது வாழ்க்கையின் பெரும்பகுதி காலங்களை தமிழுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்களிப்பு செய்த இவர்களை பெரும் நிறுவனங்கள் வந்த உடன் நம் மக்கள் மறந்துவிட்டனர். அவர்களை 100 நாள் 100 செயலி வழியே உங்களிடையே மீண்டும் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அதோடு ஒரு வேண்டுகோள்
தமிழுக்காக தொண்டு செய்தவர்களை இப்போதே பாராட்டிவிடுங்கள். வ. ஊ.சி , பாரதி இவர்களைப் போன்று அவர்கள் வாழந்த காலத்தில் கஷ்டப்படுத்திவிட்டு அதன்பின் பிற்காலத்தில் வாழ்த்தி பிரயோசனமில்லை