#100செயலி100நாள்
NVAccess, அல்லது NVDA (NonVisual Desktop Access), பார்வையற்றவர்கள் அல்லது குறைந்த பார்வை உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச மற்றும் கட்டற்ற திரை படிப்பான் மென்பொருளாகும். பார்வையற்ற பயனர்கள் கணினிகளுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களும் கணினியில் பணியாற்றும் வகையில் இம்மென்பொருள் உதவுகிறது.
உலகத்தில் எல்லாருக்குமே எல்லாம் கிடைக்கும் என்றாலும் கணினி வழியே இந்த சமத்துவம் அனைவருக்கும் கிடைக்கிறது. அப்படித்தான் பார்வையற்றவர்கள் மட்டும் கணினி கிடைக்காமல் இருந்தால் எப்படி? அவர்களும் கணினியில் எல்லா பணிகளையும் செய்ய Screen Reader நல்ல வசதியை உருவாக்கித்தருகிறது
இந்த மென்பொருள் தற்போது கணினித் திரையில் உள்ள செய்திகளை ஒலியாக பெயர்த்து ஒலி வழியே பயனாளர்களுக்கு விபரங்களை சொல்கிறது. பயனாளர்களும் அந்த ஒலி வழியே திரையில் அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து செயல்படுத்துகிறார்கள்.இதனால் அவர்களுக்கு கணினி பயன்பாடு சாத்தியமாகிறது.
NVDA மென்பொருளில் உள்ள முக்கியம்சம்
உரையிலிருந்து பேச்சு: NVA அணுகல் பல்வேறு குரல்கள் மற்றும் வேகங்களைப் பயன்படுத்தி உரையை உரக்கப் படிக்க முடியும்.
தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசுகள் தங்களது இணையத்தளங்களை பார்வையற்றவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கிஇருக்கிறார்கள் . உலகில் எல்லா நாட்டு அரசு இணையத்தளங்களும் பார்வையற்றவர்களும் அணுகும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள்.
எங்களது பேராசிரியர் திரு.சரவணன் ஐயா கருவூரார் அவர்கள் ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் இன்று வரை தமிழ் தட்டச்சில் திரை படிப்பான் செயலி வழியே செய்துவருகிறார். பலருக்கும் பயிற்சி அளித்துவருகிறார்
அதுமட்டுமல்ல முனைவர் அஜந்தாதேவி Ajantha Devi அவர்கள் பல்வேறு வகையில் பார்வையற்றவர்களுக்காக மென்பொருள்களை உருவாக்கும் பல்வேறு ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்
இவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் எனக்கு மகிழ்ச்சி
இதைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். கணினி தெரிந்தவர்களுக்கு ஒரே வேண்டுகோள். உங்களுக்கு நேரமிருந்தால் இதுபோன்ற திட்டங்களில் பங்கேற்கலாம்
https://github.com/nvaccess/nvda