#100 நாள் 100 செயலி
முப்பரிமாண காணொலிகளை உருவாக்க உதவும் பென்பொருள்தான் இந்த பிளெண்டர், Unity 3D போன்ற முப்பரிமாண மென்பொருளுக்கு மாற்றாக இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்
டச்சில் உள்ள அனிமேசன் நிறுவனம் 1994ல் உருவாக்கிய மென்பொருள்தான் இந்த பிளெண்டர்
30 வருடமாக பல புதிய புதிய வசதிக மேம்படுத்தப்பட்டு இன்று வரை செயல்படுத்தபடுகிறது
முப்பரிமாணத்திற்கு தேவைபடும் அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ள கட்டற்ற மென்பொருள், முப்பரிமாண காணொலி உருவாக்க முயற்சிப்பவர்கள் பிளெண்டரை தாரளமாகப் பயன்படுத்தலாம்
ஹாலிவுட்டில் திரைப்படங்களுக்காக பலரும் பலவிதமான மென்பொருட்களை உருவாக்கி கொண்டுள்ளனர் ஆனால் நம்மூரிலிருந்து இன்னமும் அப்படி வரவில்லையே என்று ஒரு ஆதங்கம்
அதே சமயம் தனபால் பத்மநாபன் சாரின் iGene School of VFX Technology நிறுவனம் வீடியோ எடிட்டிங், அனிமேசன் போன்ற பயிற்சிகளை சென்னையில் வழங்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது, இதிலிருந்து யாரும் சர்வதேச அளவில் பயன்படும் மென்பொருட்களை உருவாக்குவார்கள் என்று நம்புவோம்