100 செயலி 100 நாள்
இன்று நாம் பார்க்க இருப்பது பென்பாட்
இன்று இணைய வடிவமைப்புத்துறையில் பணியாற்றும் அனைவரும் பிக்மா (Figma) என்ற வரைகலை மென்பொருள் அறிந்திருப்பார்கள் அதைப்போன்றே செயல்படும் ஒரு மென்பொருள்தான் பென்பாட்
பென்பாட் கொண்டு ஒரு மென்பொருள், இணையத்தளம், செயலிகள் ஆகியவற்றின் வரைகலை, முன்மாதிரி (Prototype), ஆகியவற்றை உருவாக்கிக்கொள்ளலாம்
இது மட்டுமல்ல சேதி
நாம் உருவாக்கியவற்றை HTML5 க்கு மாற்றிக்கொடுக்கும், இது நமக்கு மிகவும் பயனுள்ளது. இந்த மென்பொருள் கொண்டு வடிவமைப்பாளர்களும், நிரலாளர்களும் சிக்கலில்லாமல், காட்சிப்பிழை இல்லாமல் பணியாற்றலாம்
அதோடு இது கட்டற்ற மென்பொருள் என்பது குறிப்பிடத் தக்கது
இணையத்தள வடிவமைப்பு, செயலி உருவாக்குபவர்கள் இதை செயல்படுத்திப்பார்க்கலாம்