Skip to content
Home » நீர் நெருக்கடி: இந்தியாவின் சவால்கள், நவீன் தொழில்நுட்பங்கள்

நீர் நெருக்கடி: இந்தியாவின் சவால்கள், நவீன் தொழில்நுட்பங்கள்

நீர்நெருக்கடி: இந்தியாவின் சவால்கள்

இந்தியா, தொடர்ந்து வளர்ந்து வரும் ஒரு பெரிய நாடு என்றாலும் அதன் மக்கள் தொகையும் அதனால் ஏற்படும் விரைவான தொழில்துறை வளர்ச்சியாலும் இந்தியா எதிர்கொள்ள உள்ள மிகப்பெரியும் சிக்கல் அடிப்படை வசதிகளில் நல்ல குடிநீர், நல்ல உணவு, நல்ல இருப்பிடம் ஆகிய நெருக்கடியை எதிர்கொள்ள உதவுகிறது. இதில் நீர் நெருக்கடியை மிகச்சரியாக எதிர்கொள்ளாவிடில் நாட்டின் பொருளாதாரத்தையும், சமூக சீரமைப்பையும் கடுமையாக பாதித்துள்ளது.

நீர்  நெருக்கடியின் காரணங்கள்:

அதிகரிக்கும் மக்கள் தொகை: இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், குடிநீர், விவசாயம் மற்றும் தொழில் துறைகளுக்கான நீர் தேவையும் அதிகரித்துள்ளது. அதோடு மறை நீர் ஏற்றுமதியும் மிக அதிகமாக உள்ளது

விரைவான தொழில்துறை வளர்ச்சி: தொழில்துறையின் வளர்ச்சி, அதிக அளவு நீரை தேவைப்படும் தொழிற்சாலைகள் மற்றும் கழிவுநீர் வெளியேற்றத்தை அதிகரித்துள்ளது.

மோசமான நீர் மேலாண்மை: திறமையற்ற நீர் மேலாண்மை, நீர் வளங்களை பாதுகாக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.

காலநிலை மாற்றம்: காலநிலை மாற்றம், மழைப்பொழிவு முறைகளை மாற்றி, நீர் வளங்களை பாதிக்கிறது.

நீர் வள நெருக்கடியின் பொருளாதார தாக்கங்கள்:

விவசாயத்தின் பாதிப்பு: நீர் பற்றாக்குறை, விவசாய உற்பத்தியை குறைத்து, விவசாயிகளின் வருவாயை பாதிக்கிறது. இதனால், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது.

தொழில்துறையின் பாதிப்பு: நீர் பற்றாக்குறை, தொழிற்சாலைகளின் செயல்பாட்டை பாதித்து, உற்பத்தியை குறைக்கிறது. இது, நாட்டின் ஏற்றுமதியை குறைத்து, பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது.

குடிநீர் பற்றாக்குறை: குடிநீர் பற்றாக்குறை, மக்களின் உடல்நலத்தை பாதித்து, மருத்துவ செலவுகளை அதிகரிக்கிறது.நீர் பற்றாக்குறையால், லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன.
குடிநீர் பற்றாக்குறை: இந்தியாவின் பல நகரங்களில், மக்கள் தினசரி குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.

சமூக அமைதியின் பாதிப்பு: நீர் பற்றாக்குறை, சமூக அமைதியை பாதிக்கிறது. நீர் ஆதாரங்களுக்காக ஏற்படும் போட்டிகள், வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றன.

சரி தண்ணீர் மேலாலண்மைக்காக என்ன மாதிரியான நவீன தொழில்நுட்பங்கள் இருக்கிறது தனி நபர் மற்றும் தனி குடும்பங்களின் குடிநீர் தேவைகளை சமாளிக்க என்ன நவீன தொழில்நுட்பம் இருக்கிறது, எப்படி சமாளிக்கலாம்என்று பார்ப்போமா?


முழுதும் வாசிக்க லாகின் செய்து படிக்கவும் | புதிதாக படிக்க விரும்புவர்கள் பணம் செலுத்த உதவும் தொடுப்பு

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *