Skip to content
Home » 74.Comodo Antivirus

74.Comodo Antivirus

74.கொமோடா ஆன்டிவைரஸ்
Comodo Antivirus
100 செயலி 100 நாள்
தகவல் தொழில்நுட்பத்துறையில் தினந்தோறும் நமக்கு ஏற்படும் பெரிய சிக்கலே நமது கணினி, செல்போன் பாதுகாப்பு. இன்றையக்காலக்கட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமே தனது சொந்த ஆன்டிவைரசை இலவசமாக கொடுத்துவருகிறது.( பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு) லினக்ஸ்க்கும் தனியா ஆன்டிவைரஸ் இருக்கிறது.
இதில்லாமல் மால்வேர் ஸ்கேன், ஸ்னைபர் ஸ்கேனிங் என சொல்லிக்கொண்டே போகலாம். தனியாள் என்றால் ஒரு கணினிக்கு ஒரு ஆன்டிவைரஸ்க்கு தனியாக காசு செலவு செய்யணும். அதே ஒர் நிறுவனமாக இருந்தால் ஒரு கணினிக்கு ஒரு தொகை என்று எல்லா கணினிக்கும் கொடுத்தே ஆகவேண்டிய நிர்பந்தம் நமக்கு இருக்கிறது.
இதற்கெல்லாம் மாற்றாக ஒரு நிறுவனம் இலவசமாக ஆன்டிவைரஸ் தருகிறது என்றால் நம்புவீர்கள்.
ஆனால்
கொமோடா ஆன்டிரவைஸ் இலவசம்தான். இணையத்தளத்தில் தகவல்கள் பாதுகாப்பாக பரிமாற உதவும் SSL சான்றிதழ்களை உருவாக்கித்தரும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள இலவச ஆன்டிரவைஸ் தான் கொமோடா. இது நமது கணினிக்கு அடிப்படை பாதுகாப்பை கொடுக்கும். இதனுள்ளே ஒரு பயர்வால் எனும் தடுப்புச்சுவர் இருக்கிறது. எனவே கணினி, இணையம் பாதுகாப்புக்கு இது உறுதி.
குறிப்பு : இது கணினியில் நடக்கும் ஒவ்வொரு பயன்பாடு செயல்பாட்டிற்கும் நம்மிடம் அனுமதி கேட்கும். இதை நாம் எரிச்சலாக நினைக்கக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *