#100செயலி100நாள்
ஓன்கிளவுட் என்பது இணையத்தில் ஒரு தனி நபர்/சிறுஅலுவலகம் போன்றவர்களுக்கு ஒர் இயங்குத்தளம் போன்று செயல்படும், இதில் நம்முடைய அலுவலகம் சார்ந்தகோப்புகள், படங்கள் போன்றவற்றை அவ்வப்போது சர்வருக்கு பதிவேற்றம் செய்துவிடும்.
இங்கே ஒரு சந்தேகம் வரும் கூகுள் டிரைவ்தான் இருக்கே என்று, கூகிள் டிரைவ், ஸ்கை டிரைவ் போன்றவை ஏற்கனவே இருக்குமே என்ற எண்ணம் வரும்
ஆனால் நம்முடையக் கோப்புக்களை நமது சர்வரில் நாமே நிறுவும்போது கோப்புகள் நம்மிடமே இருப்ப்தால் நம்முடைய தனியுரிமை பாதுகாக்கப்படும்
கூகிள் டிரைவ், ஸ்கை டிரைவ் போன்று செயல்படும் கட்டற்ற மென்பொருள்தான் ஓன்கிளவுட் (OwnCloud)
இதை நமது சர்வரில் நிறுவிக்கொள்ளவேண்டும்