#100செயலி100நாள்
இன்றையக் காலக்கட்டத்தில் குடும்பப்பெண்களுக்கு பெரிய சிக்கலே தினசரி சமையலில் ஒவ்வொரு வேளைக்கும் என்ன உணவு செய்யவேண்டும் என்பதுதான்… அப்படியே முடிவெடுத்தாலும் அதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளையும் முன்பே வாங்கி வைக்கவேண்டும் என்பதும்….அதோடு அந்த சமையல் நமக்கு புதிது என்றால் அதன் செய்முறை குறிப்பும் நாம் செய்யும்போது கடயில் இருக்கவேண்டும். இந்த வேலையை எளிதாக்க நமக்கு கிடைத்திருப்பதுதான் இந்த மீல்லி மென்பொருள்
இதில் ஒரு வாரத்திற்குத் தேவையான சமையல் பொருட்கள், அதற்கான செயற் முறை குறிப்பு, தேவையானப் பொருட்கள் என எல்லாமே கொண்ட மென்பொருள்தான் இது
வெளிநாடுகளில் சமையலுக்கு மிக அதிிகமான முக்கியத்துவம் உண்டு. ஆனால் நாம் கடைசி நிமிடத்தில் நமக்குத் தெரிந்த ஒன்றை செய்துவிட்டு போய்விடுவோம்.
ஆனால் அதற்கெல்லாம் இடமில்லாமல் இந்த மென்பொருளை சிறப்பாக பயன்படுத்தினால் நம்முடைய குடும்பமும் ஆரோக்கியமாக விளங்கும்.