கோர்சிரா பற்றி தெரிந்துகொள்ளும் முன் MOOCஎன்பது பற்றி தெரிந்துகொள்வோம்
MOOC என்பது Massive Open Online Course என்ற ஆங்கில சொற்களின் சுருக்கம். இதன் தமிழ் பொருள் பெரும்பான்மையானோருக்கான திறந்த இணைய வழிக்கற்றல் என்பதாகும்.
அனைவரும் அணுக்கூடிய பாடங்கள் என்ற பொருண்மையில் நாம் எடுத்துக்கொள்ளலாம்
இதனடிப்படையிலான தளங்களில் பிரபலமானதுதான் இந்த கோர்சிரா
நேரடியாகப் பல்கலைக்கழங்களும், பெரும் நிறுவனங்கள் நடத்தும் சான்றிதழ், பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு எல்லாமே இங்கு வழங்கப்படுகிறது. எனக்கு சான்றிதழ் வேண்டாம் நான் இந்த பாடத்திட்டத்தினைப்படிக்கலாமா என்றால் நிச்சயம் பணம் கட்டாமலும் படிக்கும் வசதி இங்கு உண்டு.
நீங்கள் எந்த கோர்ஸ்வேண்டுமானாலும் படிக்கலாம். நான் சம்பந்தமே இல்லாத நியுட்ரிசியன் சம்பந்தமான படிப்பு ஒன்றையும் படித்தேன். எனக்குத் தேவையாக இருந்தது.
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இங்கே உள்ள பாடத்திட்டங்களில் படித்து சான்றிதழ்களைப் பெற்றால் அது கூடுதல் தகுதி
தமிழ்நாட்டில் சில கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்று பலரும் வருந்தும் நிலையில் நான் பரிந்துரைப்பது கோர்சிரா தளத்தைத்தான்……..
( 2003-2004 2 எங்கள் ஊரில் இதுபோன்ற ஒரு முயற்சியை எடுத்து கல்லூரி மாணவர்கள் பணமே கட்டாமல் படிக்கும் ஒரு முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தினோம். ஆனால் காலத்தின் கட்டாயம் அது நிறுத்தப்பட்டுவிட்டது)