Moodle இணைய வழி கற்பித்தலுக்கான மென்பொருள்
#100செயலி100 நாள்
Moodle, ஒரு பிரபலமான கட்டற்ற கற்பித்தல் மேலாண்மை மென்பொருள்
(LMS), உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் பிரதானமாக பயன்படுத்தும் ஒரு மென்பொருளாக உள்ளது . கல்வி நிறுவனங்கள் இணைய வழி படிப்புகளை உருவாக்க மற்றும் நிர்வகிக்க மூடில் உதவுகிறது
Moodle இன் முக்கிய அம்சங்கள்:
பாட உருவாக்கம்: உரை, படங்கள், வீடியோக்கள் மற்றும் வினாடி வினாக்கள் உட்பட பல்வேறு உள்ளடக்க வடிவங்களுடன் உங்கள் படிப்புகளை எளிதாக வடிவமைத்து கட்டமைக்கலாம்
மாணவர்கள் எளிதாக அணுகும் வகையில், உங்கள் பாடத்திட்டங்களை ஒழுங்கமைத்து தருகிறது
மாணவர்களின் புரிதல் மற்றும் கற்றல் திறனை மதிப்பிடுவதற்கு வினாடி வினாக்கள், சிறிய சோதனை மற்றும் தேர்வுகளை உருவாக்க உதவுகிறது
ஆசிரியர்கள் பாடங்கள், வீட்டுப்பாடங்களை வழங்கவும் மற்றும் மாணவர்களுடன் தொடர்பு கொள்ளவும் Moodle ஐப் பயன்படுத்துகின்றனர்.
பேராசிரியர்கள் ஆன்லைன் படிப்புகளை உருவாக்குகிறார்கள், தேர்வுகளை நடத்துகிறார்கள் .
கார்ப்பரேட் நிறுவனங்கள் பணியாளர் பயிற்சி, வாடிக்கையாளர் மேம்பாட்டை வழங்க Moodle ஐப் பயன்படுத்துகின்றன.
நீங்களும் முயற்சித்துப்பார்க்கலாம்
https://moodle.org/