பிம்கோர்: PIMCORE பலகட்டமைப்புkகொண்ட பயனர் அனுபவ மேலாண்மை தளம்
இன்று வெப்சைட் என்றால் பலரும் இலவச வெப்சைட் பில்டர்கள், வேர்டுபிரஸ், சாப்பிஃபை, மெஜண்டோ என பல விதமான கட்டற்ற மென்பொருகள் இருந்தாலும் பெரும் நிறுவனங்களுக்கு வெப்சைட், மின்வர்த்தகம், ஆவண மேலாண்மை, பிராண்டு மேலாண்மை, மின் வர்த்தகத்தில் B2B,B2C,B2B2C என அனைத்தையும் தன்னகத்தே கொண்டது பிம்கோர். இது மட்டுமல்லாமல் தங்கள் தயாரிப்பு தகவல்கள், வாடிக்கையாளர் தரவு மற்றும் எண்ணிம ஆவணங்கள் போன்றவற்றையும் நிர்வகிக்க உதவுகிறது.
உள்ளடக்கத்தை உருவாக்குவதையும் நிர்வகிப்பதையும் எளிதாக்கி, வாடிக்கையாளர் அனுபவங்களைத் எளிமையாக்கிவிடுகிறது. இது உங்கள் எல்லா தரவுகளுக்கும் ஒரே ஒரு தீர்வு மையமாக வழங்குகிறது,
பிம்கோரின் சில முக்கிய அம்சங்கள் இங்கே:
தயாரிப்பு தகவல் மேலாண்மை (PIM): தயாரிப்பு விவரங்கள், படங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் விலைகள் உட்பட உங்கள் தயாரிப்புத் தகவலை ஒரே இடத்தில் நிர்வகிக்க பிம்கோர் உதவுகிறது.
வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை (CRM): வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை , கொள்முதல் விபரம் மற்றும் விருப்பத்தேர்வுகள் போன்ற வாடிக்கையாளர் தரவைச் சேமிக்கவும் நிர்வகிக்கவும் பிம்கோரைப் பயன்படுத்தலாம்.
டிஜிட்டல் அசெட் மேனேஜ்மென்ட் (DAM): படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் போன்ற உங்கள் அனைத்து டிஜிட்டல் சொத்துகளுக்கும் பிம்கோர் ஒரு கட்டமைப்பை வழங்குகிறது
இணையத்தள மேலாண்மை அமைப்பு (CMS): வலைப்பதிவு இடுகைகள், இணையப் பக்கங்கள் மற்றும் மின் வணிகப் பக்கங்கள் உட்பட இணையதள உள்ளடக்கத்தை உருவாக்கவும் நிர்வகிக்கவும் பிம்கோரைப் பயன்படுத்தலாம்.
மின்வணிகம்: தயாரிப்பு மேலாண்மை, விற்பனை மேலாண்மைவாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட உங்கள் ஆன்லைன் ஸ்டோரை இயக்குவதற்கு பிம்கோரைப் பயன்படுத்தலாம்.
பிம்கோர் ஒரு சிறந்த பெரு நிறுவன மேலாண்மை மென்பொருள். இதற்கு மாற்றாக அடோபி நிறுவவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் கிளவுட் இருக்கிறது. அதற்கு ஆகும் மிகவும் அதிகம் என்றாலும் அதன் பயனுக்காக பல்வேறு பெறு நிறுவனங்கள் இதை பயன்படுத்துகின்றன. அடோபி நிறுவனத்தினிற்கு சரி சமமாக பிம்கோர் இயங்குகிறது என்பதுதான் முக்கியம்
தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் இந்த மென்பொருளிலும் அனுபவம் பெறுவது மிக நல்லது